கொழும்பில் இருந்து யாழ் சென்ற அதிசொகுசு பேருந்து கோர விபத்தில் விபத்து

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

யாழ் – கண்டி நெடுஞ்சாலையில் புத்தூர் சந்திக்கு அருகில் இன்று காலை (11.11.2023) விபத்து ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து, யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த கூலர் ரக வாகனமும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக சில பயணிகள் காயமடைந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான கூலர் வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.