விக்ரமின் கோப்ரா படப்பிடிப்பு நிறைவு

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து கோப்ரா படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் கடந்த  இரண்டு வருடங்களுக்கு மேல் தயாரிப்பில் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த சந்தோஷத்தை படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினர் விக்ரம். ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.இதில் கேஜிஎப் புகழ் ஸ்ரீநிதி வெட்டி, மியா ஜார்ஜ் ,மிருளாயினி ரவி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.கனிகா ,பத்மபிரியா ,மலையாள நடிகர்களான ரோஷன் மெத்யூ ,சர்ஜினோ காலித் ,வில்லன் நடிகர் பாபு ராஜ், ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தில் முக்கியவேடத்தில் நடித்துள்ள கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இதில் பொலிஸ் வேடத்தில் நடித்துள்ளார்.