கனடாவில் குடியேற காத்திருப்போருக்கு அடித்த பேரதிஸ்டம்..! வெளியாகிய மகிழ்ச்சி தகவல்


கனடா 2025ஆம் ஆண்டுக்குள் 15 லட்சம் புலம்பெயர்ந்தோரை அனுமதிப்பதாக இலக்கு நிர்ணயித்துள்ளது.

வயது முதிர்ந்த தலைமுறையால் (இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிறப்பு விகிதம் வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் பிறந்த தலைமுறையினர்) அதன் பொருளாதாரத்தில் எஞ்சியிருக்கும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு கனடா குடியேற்றத்தை எதிர்பார்க்கிறது.

ஆனால், இவ்வளவு வெளிநாட்டவர்களின் வருகையை அனைத்து தரப்பினரும் ஒப்புக் கொள்ளவில்லை. நவம்பர் மாதத் தொடக்கத்தில், கூட்டாட்சி அரசு 2025ஆம் ஆண்டுக்குள், ஓராண்டுக்கு ஐந்து லட்சம் குடியேறுபவர்கள் என்ற கணக்கில் 15 லட்சம் குடியேற்றங்களை வரவேற்கும் ஒரு தீவிரமான திட்டத்தை அறிவித்தது.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஒவ்வோர் ஆண்டும் பிரிட்டனில் குடியேறுகிறவர்கள் எண்ணிக்கையைவிட 8 மடங்கும், அமெரிக்காவில் குடியேறுவோர் போல 4 மடங்கும் கனடாவில் குடியேற்றம் நடக்கும்.

பல புதிய குடியேற்றங்களை வரவேற்பதில் கவலைக்குரிய விஷயங்களும் இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பு காட்டுகிறது

பல ஆண்டுகளாக, மக்கள்தொகை மற்றும் பொருளாதாரத்தை வளர்த்துகொள்வதற்காக கனடா குடியுரிமை இல்லாமல் காலவரையறையின்றி நாட்டில் தங்குவதற்கு உரிமையுள்ள நிரந்தர குடியிருப்பாளர்களை ஈர்க்க முயன்று வருகிறது.

கடந்த ஆண்டு, அந்நாடு 405,000 நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்றது. இது அதன் வரலாற்றில் மிக அதிகமான எண்ணிக்கை.

பல மேற்கத்திய நாடுகளைப் போலவே, கனடாவிலும் வயதானோரின் மக்கள் தொகை மற்றும் குறைவான பிறப்பு விகிதம் உள்ளது.

அதாவது நாடு வளர்ச்சியடைய வேண்டுமானால், புலம்பெயர்ந்தவர்களைக் கொண்டு வர வேண்டும். குடியேற்றம் செயலூக்கம் கொண்ட மக்கள்தொகையின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.

அது 2032ஆம் ஆண்டில் நாட்டின் மக்கள்தொகை அதிகரிப்புக்குப் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா மற்ற பெரிய நாடுகளைவிட திறமையான புலம்பெயர்ந்தோரை வரவேற்பதோடு மட்டுமின்றி, 2021இல் 20,428 அகதிகளை ஏற்றுக்கொண்டு, அகதிகள் குடியேற்றத்திற்கான சிறந்த நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.

அந்நாடு எதிர்காலத்திற்கான லட்சிய இலக்குகளை நிர்ணயித்திருந்தாலும், அது எப்போதும் தனது சொந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை என்பதை வரலாறு காட்டுகிறது.

2021ஆம் ஆண்டில், கனடா சுமார் 59,000 அகதிகளை குடியேற்றுவதை இலக்காகக் கொண்டிருந்தது. இது முன்னர் ஏற்றுக்கொண்ட அளவைவிட மூன்று மடங்கு அதிகம்.

2023ஆம் ஆண்டளவில், 76,000 அகதிகளை குடியேற்ற கனடா இலக்கு வைத்துள்ளது.