கொரோனா தாக்கம் சிரஞ்சீவி படத்தின் ரிலீஸ் திகதி மாற்றம்

இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் ஒரு பங்காக சினிமா தியேட்டர்கள் இயங்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.இதனால் தமிழ் ,ஹிந்தி,தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடிகர்களின் படங்கள் ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அந்த வகையில் தெலுங்கில் கொராடாலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி,ராம்சரண்,காஜல் அகர்வால்,பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ள ஆச்சார்யா படம் பிப்ரவரி 4 ஆம் திகதி வெளியாக தயாராகி இருந்தது. இந்நிலையில் ஆச்சார்யா  படக்குழுவினர் இப்படத்தின் ரிலீஸ் திகதியை தள்ளி வைத்துள்ளனர். அதன் படி ஏப்ரல் 1 ஆம் திகதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்