தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கியுள்ள சீன மக்கள் : மூன்றாம் உலகப்போருக்கு ஆயத்தமா?

உலக அளவில் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் சீன மக்கள் தொடர்ச்சியாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 தங்கத்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான சீனா, தற்போது அதிகம் வாங்கும் நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது.
சீனாவும் இந்தியாவும் பொதுவாக உலகின் மிகப்பெரிய தங்கம் வாங்கும் நாடுகள் என்றே அறியப்படுகிறது.

 கடந்த ஆண்டு நகைகள், தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நாணயங்களின் சீன நுகர்வு அதிகரித்ததால் தங்கத்தின் விலை உயர்ந்தது. இந்த ஆண்டும் தங்க நுகர்வு அதிகரித்துள்ளது.

சீனாவின் தங்க நகைகளின் தேவை 10 சத வீதம் உயர்ந்துள்ளது,
இதனிமையே இந்தியாவின் தங்க நகை தேவை 6 சத வீதம் சரிந்துள்ளது. சீன தங்கக் கட்டிகள் மற்றும் நாணய முதலீடுகள் 28 சத வீதம் அதிகரித்து உள்ளன.

 உலக அளவில் எழுந்துள்ள போர் சூழல்களால் மூன்றாம் உலகப்போர் வர வாய்ப்புள்ளதால் சீனா இந்த முதலீட்டை மேற்கொள்கிறதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 
சீன மக்கள் மாத்திரமின்றி, மத்திய வங்கியும் பெருமளவிலான தங்கத்தை வாங்கிக் குவிப்பதாக கூறப்படுகிறது.
உலக தங்க கவுன்சிலின் தரவுகளின் பிரகாரம், 2023இல் சீனாவின் மத்திய வங்கி 225 டொன் தங்கத்தை வாங்கியுள்ளது.

கடந்த மாதம், சீனாவின் தங்கம் கையிருப்பு 5 டொன்கள் உயர்ந்து, நாட்டின் மொத்த கையிருப்பு 2,262 டொன்களாக அதிகரித்துள்ளது.