இலங்கையில் விற்பனையாகும் சீனாவின் பி.வை.டி. வாகனங்கள் : நீதிமன்றில் நேற்று எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்


இலங்கை சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 991 பி.வை.டி. ரக மின்சார வாகனங்களை, பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுவிப்பதற்கு, மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நேற்றைய தினம் இணக்கம் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட வாகனங்களை தடுத்து வைப்பதற்கு எதிராக ஜோன் கீல்ஸ் சி.ஜி. நிறுவனம் தாக்கல் செய்த மனுவை பரிசீ லித்த பின்னர் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த வகை வாகனங்கள் மீதான வரிகளில் வித்தியாசமாகக் கணக்கிடப்பட்ட 3.6 பில்லியன் ரூபா தொகையை, ஒரு அரச வங்கியில் உத்தரவாதமாக சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் மனுதாரர் நிறுவனம் அந்த உத்தரவாதத்திற்கு பொருந்தக்கூடிய வட்டியை செலுத்த ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.