தாய்வானைச் சுற்றி மூன்று நாட்கள் இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக சீனா அறிவிப்பு!

தாய்வானைச் சுற்றி மூன்று நாட்கள் இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.கலிபோர்னியாவில் தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியுடன் நடத்திய சந்திப்பு குறித்து சீனா கோபமடைந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 8 முதல் 10ஆம் திகதி வரை போர் தயார்நிலை ரோந்துகளை நடத்தும் என்று மக்கள் விடுதலை இராணுவத்தின் (பிஎல்ஏ) கிழக்கு தியேட்டர் கட்டளை ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்துள்ளதுதாய்வான் ஜலசந்தியில், தாய்வானின் வடக்கு மற்றும் தெற்கிலும், தாய்வானின் கிழக்கே கடல் மற்றும் வான்வெளியிலும் பொலிஸ் ரோந்து பயிற்சிகளை யுனைடெட் ஷார்ப் ஸ்வார்ட் ஈடுபடுத்தும் என்று கட்டளை செய்தித் தொடர்பாளர் மூத்த கர்னல் ஷி யி கூறினார்.