விஸ்வரூபம் எடுத்து உலக சந்தையில் கொடி கட்டிப் பறக்கும் சீனா - வல்லரசுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரும் சவால்!


அரிய மண் தாதுக்கள் எனப்படும் Rare Earth Elements சந்தையில் சீனா கொடிகட்டிப் பறக்கிறது.  இது சர்வதேச நாடுகளுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக  உள்ளதோடு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் சவாலாகவும் உருவெடுத்திருக்கிறது.

அந்த வகையில், சீனாவின் வசம் சுமார் 44 மில்லியன் டன் அரியவகை மண் தாதுக்கள் கையிருப்பில் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மின்சார வாகனங்கள் உள்ளிட்டவைகளைத் தயாரிப்பதற்கு பயன்படுகிற நியோடைமியம் காந்தம், ஸ்கேன்டியம் உள்ளிட்ட உலோகங்கள், தனிமங்கள் உலகின் அரிய வகை மண் தாதுக்கள், உலோகங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நாடு விடுதலைக்கு முன்னர் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தென்னாப்பிரிக்காவையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால் அப்போது இத்துறையில் இந்தியா முன்னணியில் இருந்தது. பின்னர் அமெரிக்கா இந்த இடத்துக்கு வந்தது. 

தற்போது அரியவகை மண் தாதுக்கள் சர்வதேச சந்தையில் பெரும்பகுதி சீனா வசமாக உள்ளது. சீனா, 2021ஆம் ஆண்டு சுமார் 168,000 டன் அரிய வகை தாதுக்களை உற்பத்தி செய்திருக்கிறது.

இது சர்வதே சந்தையில் 61% ஆகும். ஆனால் சீனாவின் உண்மையான உற்பத்தித்திறன் இதனைவிட கூடுதலாக இருக்கும் என்பது சர்வதேசத்தின் கணிப்பு.

இதற்கு அடுத்ததாக வியட்நாம், பிரேசில், ரஷ்யா உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அமெரிக்கா வசம் 1.8 மில்லியன் டன் கையிருப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1980, 1990களில் உலகமயமாக்கல் என்பது முழுவீச்சில் உலக நாடுகளின் கதவுகளை தட்டிய காரணத்தால் சீனா இத்துறையில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.