சீனாவின் அக்கறை ஆபத்தானது!


சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சீன அமைச்சர்களுக்கு அவர்களின் நாட்டில் வேலைகள் இல்லை என்பது போலவே தெரிகின்றது. வாரம் ஒருமுறை எவராவது இங்கு வந்துவிடுகின்றனர். அவ்வளவு பெரிய நாட்டில் இருந்து அவர்கள் இங்கு வருவதன் பின்புலம் பற்றியும் ஆராய வேண்டும்.

சீனாவின் வெளிவிவகார அமைச்சரை வரவேற்க எமது நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் சென்றார். வெளிவிவகார அமைச்சர் செல்லவில்லை. தனிப்பட்ட தேவைகளின் நிமித்தமான கொடுக்கல் – வாங்கல்களுக்காகவே அவர்கள் வருகின்றனர். அதனால்தான் இங்கும் தனிப்பட்ட ரீதியில் வரவேற்பளிக்கப்படுகின்றது.

இலங்கைமீதான அன்பால் அவர்கள் இங்குவரவில்லை. இலங்கைக்கு கடும் பாதிப்புகளை சீனாவே ஏற்படுத்தியது. எஞ்சியவற்றை அழிக்கவே அவர்களை இவர்களும் அழைத்துவந்து, எஞ்சியவற்றை பூஜை செய்கின்றனர். ” – என்றார்.