யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக குழப்பம்: காவல்துறையினர் குவிப்பு


யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக குழப்ப நிலையொன்று உருவாகியுள்ளது.

இந்த வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் அர்ச்சுனா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் வெளியிட்ட காணொளியொன்று தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதனை தொடர்ந்து, இந்த நிலைமையை விசாரிப்பதற்காக பிரதேச மக்கள் வைத்தியசாலை பணிப்பாளரை சந்திக்க சென்ற போது அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வைத்தியசாலை பணிப்பாளரை சந்திப்பதற்கு சென்ற மக்களுக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.