திரிபோலி என்ற கொலை குழுவை உருவாக்கிய கோட்டாபய : அம்பலமான இரகசியங்கள்

திரிபோலி என்ற கொலை குழுவை உருவாக்குமாறு கோட்டாபய ராஜபக்ச எங்களிடம் கேட்டுக் கொண்டார் என ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொர்பில் சனல்4 வெளியிட்ட  காணொளியில் ஆசாத் மௌலானா இது குறித்து விபரித்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

மேலும் தெரிவிக்கையில், 

நானும் அந்த சமயம் என்னுடைய தலைவராக இருந்த பிள்ளையானும் கோட்டாபயவை சந்தித்தவேளை எங்களிடம் அவர் திரிபோலி என்ற கொலைகுழுவை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டார்.

திறமைசாலிகளை தெரிவு செய்து இணைந்து செயற்படுங்கள் என கோட்டாபய எங்களிடம் தெரிவித்தார்.

இதன் காரணமாக பிள்ளையான் தன்னுடைய நபர்களைக் கொண்டு திரிபோலி என்ற கொலைக் குழுவை உருவாக்கினார். 

அதன் பின்னர் கோட்டாபய ராஜபக்சவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் திரிபோலி கொலைகுழு செயற்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.