சந்திரிக்காவின் பெருந்தன்மை - விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை



அதிபரின் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென, தேசிய சமாதான பேரவை வலியுறுத்தி யுள்ளது.

விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் சிலர் தமது தண்டனை காலத்துக்கு மேலாக பல வருடங்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்ததால், அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென தேசிய சமாதான பேரவை வலியுறுத்தியுள்ளது.

அதிபரின் பொதுமன்னிப்பின் கீழ், அரசியல் கைதிகள் 08 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் மூன்று பேர், முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்கவை படுகொலை செய்ய முயன்ற குற்றச் சாட்டின் பேரில் தண்டனை அனுபவித்து வந்தவர்களாவர். இந்தக் குண்டுத்தாக்குதலில் முன்னாள் அதிபர் சந்திரிக்கா தமது கண்பார்வையை இழந்தார்.

எனினும், அதிபர் ரணில் விக்ரமசிங்க பொது மன்னிப்பின் கீழ் அவர்களை விடுவிப்பதற்கு, முன்னாள் அதிபர் சந்திரிக்கா தமது சம்மதத்தை வெளியிட்டார். இதன்மூலம், சித்திரவதைக்குள்ளாகி பிளவுபட்டுள்ள எமது நாட்டின் மக்கள், மீண்டெழத் தேவையான பெருந்தன்மையை முன்னாள் அதிபர் குமாரதுங்க நிரூபித்துள்ளாரென தேசிய சமாதான பேரவை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், விடுவிக்கப்பட்ட எட்டு கைதிகளில் நால்வர் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை விட, நீண்ட காலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் என்பதை அதிபர் செயலகம் ஒப்புக்கொண் டுள்ளதாக தேசிய சமாதான பேரவை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித் துள்ளது.

விடுவிக்கப்பட்ட மூன்று கைதிகளுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர்கள் 22 ஆண்டு கள் சிறைத்தண்டனையை பெற்றிருந்தனர். எனினும், மற்றுமொரு கைதிக்கு நீதிமன்றினால் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் 14 ஆண் டுகள் சிறைவாசம் இருந்துள்ளார். இன்னுமொருவருக்கு 10 ஆண்டு கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் 14 ஆண்டு களை சிறையில் கழித்துள்ளார். அவ்வாறே, 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு கைதிகள், 14 ஆண்டுகள் சிறை யிலிருந்துள்ளனர். இவர்களும் அதிபரின் மன்னிப்பைப் பெற் றவர்களில் அடங்குவரென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.