எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் மி.மீ. 100க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும், கிழக்கு மாகாணம் மற்றும் முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.