முன்னாள் கனடா தமிழ் வர்த்தக சம்மேளனத் தலைவர் தொடுத்த அவதூறு வழக்கு -ஒன்ராறியோ உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு


முன்னாள் கனடா தமிழ் வர்த்தக சம்மேளனத் தலைவர் (Canadian Tamil Chamber of Commerce)அஜித் சபாரத்தினத்தின் மீது  சமூக ஊடகங்களினூடாக அவதூறு தெரிவிக்கப்பட்டதற்கு எதிராக அவரினால் தொடுக்கப்பட்ட வழக்கில் ஒன்ராறியோ உயர் நீதிமன்றம் இரு வேறு திகதிகளில் கூடி அஜித் சபாரத்தினத்திற்கு நட்டஈடாக மொத்தத் தொகையாக 123 ,000 (123 K) பின்வரும் அடிப்படையில் வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது .

2022 August 18 அன்றைய திகதியின்படி பொது நட்டஈடாக $75,000 மற்றும் தண்டனையாகவும் ,முன்மாதிரியாக மற்றவர்கள் இவ்வாறான செயல்களைச் செய்வதனைத் தடுக்கும் முகமாக விதிக்கப்பட்ட தண்டப்பணம் $ 25,000 . 2022 November 22 அன்றைய திகதியின்படி வாதியான அஜித் சபாரத்தினத்திற்கு கணபதிப்பிள்ளை யோகநாதன் ,MK Tamil ,2137534 Ontario Corp ம் , PARAII Media Group m ,PARAII.Com பிரதிவாதிகளும் பகுதியான நட்ட ஈடாக $23,000 வாதிக்குக் கொடுக்கும்படி உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இவையாவும் 30 நாட்களுக்குள் கொடுக்கப்படவேண்டும் என்று நீதிபதியினால் கையொப்பமிடப்பட்டுள்ளது.

மேலதிக நிபந்தனைகளையும் உத்தரவுகளையும் கீழே தரப்பட்டுள்ள நீதிமன்றக் கோவை இலக்கத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் . The above key elements of the court decision has been translated by me. Somasundaram Srikathirgamanathan B.Sc ,MA(Linguistics) MAG (Fully Accredited ) IRB Accredited Interpreter & Translator