எவரும் போட்டியிடாத போதிலும் தோல்வியடைந்த வேட்பாளர் : சுவாரஷ்ய சம்பவம்

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் எதிர்த்து யாருமே போட்டியிடாத நிலையில் ஒரே ஒரு வேட்பாளர் மட்டும் போட்டியிட்ட நிலையில் அந்த வேட்பாளரும் தோல்வி அடைந்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவை பொறுத்தவரை ஒவ்வொரு மாகாணத்திலும் ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் தேர்தல், கட்சி உறுப்பினர்களிடையே நடக்கும்.

அந்த வகையில் நேற்று நெவாடா மாகாணத்தில் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் நடைபெற்றது. அதில் தொழில்நுட்ப காரணங்களால் டிரம்ப் பெயர் இடம்பெறவில்லை.

 எனவே அவரை எதிர்த்து போட்டியிட்ட நிக்கி ஹாலே என்பவரின் பெயர் மாத்திரம் இருந்தது. எனவே அவருக்கு தான் அனைத்தும் வாக்குகளும் விழும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை என்று அதிக வாக்குகள் விழுந்து உள்ளது.

எனவே நிக்கி ஹாலே தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டதால் அவருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.