புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு: 100 சதவீத செயற்றிறன் உறுதி!

புற்றுநோய்க்கு எதிராக ரஷ்யா உருவாக்கிய 'என்ட்ரோமிக்ஸ்' தடுப்பூசி 100 சதவீத செயற்றிறனை காட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடுப்பூசி, புற்றுநோய் கட்டிகளை வெற்றிகரமாக அழித்துள்ளதை ரஷ்யாவின் சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன், இந்தத் தடுப்பூசி தொடர்பில் நடைபெற்ற சோதனைகளில் எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

கோவிட்-19 தடுப்பூசியில் பயன்படுத்தப்பட்ட அதே தொழில்நுட்பத்தை அடிப்டையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த 'என்ட்ரோமிக்ஸ்' தடுப்பூசி, உடலில் ஆரோக்கியமான டிசுக்களை சேதப்படுத்தாமல் புற்றுநோய் செல்களை மட்டும் தாக்கி அழிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்தத் தடுப்பூசி, தேர்தெடுக்கப்பட்ட புற்றுநோய் மையங்களில் ஆரம்பகட்ட பயன்பாட்டில் உள்ளது.

இறுதிக்கட்ட சோதனைகள் முடிவடைந்ததும் இது பொதுப் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவை புற்றுநோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் தற்போதைக்கு ஒரு நோய்த் தடுப்பாக அதனை வழங்கும் திட்டம் இல்லை எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.