11 ஆண்டுகளின் பின் கனேடிய – சீன பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு

கனேடிய மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

பதினொரு ஆண்டுகளின் பின்னர் முதல் தடவையாக கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளயர் (bill blair) சீன பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் டொங் யூனை சந்தித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற ஷங்ரி லா பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் இரு நாடுகளினதும் பாதுகாப்பு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

சீனாவினால் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் தலையீடுகள் குறித்து கனடா தனது கரிசனையை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக ரஸ்யாவிற்கு வழங்கப்பட்டு வரும் பொருளாதார உதவிகள் மற்றும் தாய்வானுக்கு அருகாமையில் மேற்கொள்ளப்படும் இராணுவ பயிற்சிகள் போன்றன குறித்து கரிசனை வெளியிடப்பட்டுள்ளது.