மே 18ம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரித்தது கனடா!

மே 18ம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரிக்கும் பிரேரணையை கனேடிய நாடாளுமன்றம் இன்று (வியாக்கிழமை) ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி இந்தப் பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.இந்நிலையில் இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் “ஒவ்வொரு ஆண்டும் மே 18ம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரிக்கும் உலகின் முதல் தேசிய நாடாளுமன்றம் கனடாவாகும்” என தெரிவித்துள்ளார்.