அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க அமெரிக்க தீயணைப்பு துறை கடுமையாக போராடி வரும் நிலையில், கனடா உதவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் 51 வது மாகாணமாக கனடாவை இணைக்க வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் அண்மையழலட கூறிய நிலையில், அதற்கு முன்னாள் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ பதிலடி கொடுத்திருந்தார்
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் கனடா இடையே மோதல் போக்கு ஏற்பட்டிருந்தாலும், அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவிய பயங்கரக் காட்டுத்தீ காரணமாக இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் காட்டுத்தீயை அணைக்க அமெரிக்க தீயணைப்பு படையினர் போராடி வரும் நிலையில், தீயை அணைக்கும் பணியில் கனடா அரசுக்கு சொந்தமான விமானங்கள் அனுப்பப்பட்டதாக முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ரூடோ, தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
கலிபோர்னியாவின் தெற்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க, கனடா முயற்சி செய்து வருவதுடன், 250 விமானங்கள் ஏற்கனவே தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன என்றும், இது எங்கள் அயல் நாட்டை காப்பாற்ற உதவும் நடவடிக்கை என்றும் ஜஸ்டின் ரூடோ தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.