கனடாவில் நாடு கடத்தப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கனடாவில் பெரும்பாளானோர் நாடு கடத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த சில வருடங்களாகவே நாடு கடத்தப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக மேலும் தெரியவந்துள்ளது.

அத்தோடு, நாடு கடத்தப்படுவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக அந்நாட்டு எல்லைப் பாதுகாப்பு பிரிவினரும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கனடாவில் இருந்து 2023ம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப் பகுதியில் மாத்திரம் 7032 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்போது, முன்னெய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது நாடு கடத்தப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

அதன்படி, நாள் ஒன்றுக்கு சராசரியாக நாற்பது பேர் வரையில் கடாவிலிருந்து நாடு கடத்தப்படுகின்றனர்.

எவ்வாறாயினும், நாடு கடத்தல்கள் அதிகரிக்கப்பட்டமைக்கு அகதி ஆதரவு அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.