கனடாவில் பனிக்கரடிகளின் எண்ணிக்கை குறைவடைவதாக தகவல்

 

கனடாவில் பனிக்கரடிகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருவதாகப் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறிப்பாகப் பெண் பனிக்கரடிகள், பனிக்கரடிக் குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கை பெரிய அளவில் சரிந்துள்ளது.

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வாளர்கள் கனடிய ஆர்ட்டிக் வட்டாரத்தின் தென் பகுதியை விமானம் மூலம் ஆராய்ந்து பனிக்கரடிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு வருகின்றனர்.

மிக அண்மையில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் இம்மாத ஆரம்பத்தில் வெளியிடப்பட்டன.

அப்போது 618 பனிக்கரடிகள் இருப்பது தெரியவந்தது. 5 ஆண்டுகளுக்கு முன் அந்த எண்ணிக்கை 842ஆக இருந்தது.

அவற்றின் எண்ணிக்கை குறைந்துவருவதற்குப் பருவநிலை மாற்றம், வேட்டையாடுதல், பனிக்கரடிகள் வேறு இடத்திற்குச் செல்வது ஆகியவை காரணங்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் அவற்றின் இருப்பிடமான கடற்பனிப் படலங்கள் அபாயகரமான வீதத்தில் குறைந்து வருகின்றன.