மீண்டும் நிர்வாண ´போஸ்´ கொடுக்க முடியுமா?-பீட்டா

நடிகர் ரன்வீர் சிங்கை மீண்டும் நிர்வாணமாக ´போஸ்´ கொடுக்க அழைத்திருக்கிறோம் என பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது.நடிகர் ரன்வீர் சிங் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் புரோமோஷனுக்காக நிர்வாணமாக இருக்கும் படங்களைப் பதிவிட்டிருந்தார். இச்செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் எதிர்ப்புகள் உருவாகின. அதனைத் தொடர்ந்து ஆலியா பட், அர்ஜூன் கபூர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் அவருக்கு ஆதரவாக கருத்தும் தெரிவித்தனர்.

மேலும், இந்தப் புகைப்படங்கள் குறித்து ரன்வீர் மேல் வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.இந்நிலையில் விலங்குகள் நல அமைப்பான பீட்டா விலங்குகளை உணவிற்காகக் கொல்லக்கூடாது என்கிற ’ட்ரை வேகன்’ பிரச்சாரத்திற்காக தங்கள் அட்டைப் படத்தில் நிர்வாணமாக நடிக்க முடியுமா? என நடிகர் ரன்வீர் சிங்குக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன் எங்கள் இதழிற்கு ரன்வீர் பொருத்தமாக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளது.இதுகுறித்து ரன்வீர் சிங் தரப்பில் எந்த மறுப்பும் வெளியாகவில்லை.