வெந்து தணிந்தது காடு வெற்றி -சிம்புவுக்கு கார் கெளதம் மேனனுக்கு பைக்!

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து அண்மையில் வெளியான திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. எழுத்தாளர் ஜெயமோகன் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஐசரி கணேசன் தயாரித்துள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார், மலையாள நடிகர் சித்திக், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று, வெற்றிப் படமாக உருவெடுத்துள்ளது. படம் வெளியான முதல் நாளிலேயே ரூ. 10.86 கோடி வசூலை ஈட்டியதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். கூடுதலாக மதுஸ்ரீ பாடியுள்ள ’மல்லிப்பூ’ பாடல் பலரது ப்ளேலிஸ்டில் ரிப்பீட் மோடில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.இந்நிலையில் இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு ரூ.92 லட்சம் மதிப்புள்ள Toyota VellFire காரை பரிசாக அளித்துள்ளார். மேலும் படத்தை இயக்கிய இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனனுக்கு ராயல் என்ஃபீல்டு பைக் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.