மியான்மர் நாட்டில் இன்று காலை அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 7.7 மற்றும் 6.4 எனப் பதிவாகியுள்ளன. சகைங் நகரில் இருந்து வடமேற்கில் 16 கிலோமீட்டர் தூரத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நண்பகல் 12.50 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கங்கள் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டுள்ளன. சில கட்டடங்கள் இடிந்து விழும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் அலறியடித்து கொண்டு வீதிகளில் ஓடம் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
இந்த நிலநடுக்கம் வடக்கு தாய்லாந்து மற்றும் தலைநகர் பேங்கொக்கிலும் உணரப்பட்டுள்ளது.
இதேபோல் சீனாவின் தென்மேற்கில் உள்ள யுன்னான் மாகாணத்திலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள இம்பால், கொல்கத்தா ஆகிய நகரங்களில் லேசான அதிர்வுகளை உணர முடிந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மியான்மர் நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள், சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதேசமயம் பலத்த சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என்பது மட்டும் தெரிய வருகிறது.
மியான்மரின் மண்டலாயில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆவா பாலம் இடிந்து இர்ராவாடி ஆற்றில் விழுந்துள்ளது.
பாங்கொக்கில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் ஒன்று இடிந்து தரைமட்டமானது. ஏராளமான கட்டடங்கள் சரிந்து விழுந்துள்ளன.
அடுத்தடுத்து பதிவான இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் பொதுமக்களை கதிகலங்க வைத்துள்ளன