தாய்லாந்து பெளத்த துறவிகளால் புத்தர் சிலை பிரதிஸ்டை - திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்!


திருகோணமலை நகர் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரால் வேலியிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் நிலப்பகுதியில் தாய்லாந்திலிருந்து பெளத்த துறவிகளது வருகையுடனான புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழர் பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெறும் இவ்வாறான பெளத்தமயமாக்கல் செயல்பாடுகளை எதிர்க்கும் முகமாக இன்று மதியம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கு தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட பெளத்த ஆக்கிரமிப்பினை இந்த அரசானது உடன் நிறுத்த வேண்டும், தமிழர்களது பூர்வீக நிலங்கள் தொடர்ச்சியான பெளத்தமயமாக்கப்படும் நிலைமைகள் உடனடியாக தடுக்கப்பட வேண்டும், என குறிப்பிட்டு இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.