இருளில் மூழ்கப்போகும் பிரித்தானியா: வெளியான காரணம்

பிரித்தானியாவில், மின்சாரம் தயாரிப்பதற்கான எரிபொருள் கையிருப்பு, ஐந்து நாட்களுக்கு மட்டுமே காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவில் மின்சாரமானது, 40 சதவிகிதம் எரிபொருள் மூலமாகத்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில், அந்நாட்டிடம் மின்சாரம் தயாரிப்பதற்கான எரிபொருள் கையிருப்பு ஐந்து நாட்களுக்கு மட்டுமே காணப்படுவதாக எதிர்க்கட்சியான லேபர் கட்சி தெரிவித்துள்ளது.

அதனால், பிரித்தானியா இருளில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

அத்தோடு, பிரித்தானியாவின் அண்டை நாடுகளான பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலியில், சராசரியாக 175 நாட்களுக்கான, அதாவது, இந்நாட்டுடன் ஒப்பிடும் போது, 35 மடங்கு அதிக எரிபொருள் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், எரிபொருள் விலை குறைவாக இருக்கும்போதே அதை வாங்கி சேமித்திருக்கவேண்டும், இப்போதோ, விலை அதிகமாகிவிட்டது. ஆகவே, அதிக செலவு செய்து எரிபொருள் இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது என லேபர் கட்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.