மாலியில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறுவதாக பிரித்தானியா அறிவிப்பு!

மாலியில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக திட்டமிட்டதை விட முன்னதாகவே மாலியில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறுவதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் ஹெப்பி தெரிவித்துள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு முதல் சுமார் 300 பிரித்தானிய வீரர்கள், இஸ்லாமிய தீவிரவாதத்திலிருந்து உள்ளூர் மக்களைப் பாதுகாப்பதற்கான ஐ.நா. பணியின் ஒரு பகுதியாக நாட்டில் இருந்தனர்.மூன்று ஆண்டுகளில் மாலியில் நடந்த இரண்டு சதிப்புரட்சிகள் முயற்சிகளை துருப்புக்கள் குறைத்துவிட்டன என்று ஹீப்பி கூறினார்.ரஷ்ய கூலிப்படையான வாக்னருடன் இணைந்து பணியாற்றியதற்காக தற்போதைய மாலி அரசாங்கத்தையும் அவர் கடுமையாக தாக்கி பேசினார்.

‘வாக்னர் குழுமம் பாரிய மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையது மற்றும் வாக்னர் குழுமத்துடன் மாலி அரசாங்கத்தின் கூட்டாண்மை அவர்களின் பிராந்தியத்தில் நீடித்த ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு எதிர்மறையானது’ என்று அவர் மேலும்; கூறினார்.மாலியில் நடந்த நடவடிக்கை ‘உலகின் மிகவும் ஆபத்தான அமைதி காக்கும் பணி’ என்று விபரிக்கப்பட்டது மற்றும் 2013ஆம் ஆண்டு முதல் அங்கு 288 ஐ.நா வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இப்பகுதியில் இருந்தபோது அல்-கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசு போன்ற இஸ்லாமிய போராளி குழுக்களுக்கு எதிராக பிரித்தானிய துருப்புக்கள் நீண்ட தூர உளவு ரோந்துகளை நடத்தியது.