உக்ரைன் வான்பரப்பை கட்டுபடுத்த ரஷ்யாவுக்கு முடியாமல் போயுள்ளதாக பிரித்தானியா அறிவிப்பு!

உக்ரைன் வான்பரப்பை கட்டுபடுத்த ரஷ்யாவுக்கு முடியாமல் போயுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சின் அண்மைய புலனாய்வு தகவல்கள் இதனை உறுதிபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உக்ரைனுக்கு எதிரான போர் ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இருந்து அந்நாட்டு வான்பரப்பை கைப்பற்றுவது ரஷ்யாவின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக உள்ளது.எனினும் அவர்களுக்கு அது முடியாமல் போயுள்ளதாகவும் அவர்களது முன்னேற்றம் கணிசமான கட்டுப்படுத்தப்படுவதாகவும் பிரித்தானியா அறிவித்துள்ளது.இவ்வாறான பின்னணியில் உக்ரைனில் இருந்து இதுவரையில் 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.எனினும் அவர்கள் நாட்டிலிருந்து வெளியேறும் போது பாதுகாப்பான வழிகளை கண்டு பிடிப்பதில் சிக்கல்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.ரஷ்ய படையினரின் தாக்குதல் நடவடிக்கைகள் நாட்டை விட்டு வெளியேற முயல்பவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.