வடக்கு அயர்லாந்து செயலாளர் பதவியில் இருந்து பிராண்டன் லூயிஸ் இராஜினாமா!

பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் தலைமைக்கு நெருக்கடி அதிகரித்து வருவதால், வடக்கு அயர்லாந்து செயலாளர் பதவியில் இருந்து பிராண்டன் லூயிஸ் இராஜினாமா செய்துள்ளார்.ஆதரவில் ஏற்பட்ட இழப்பு காரணமாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பிரதமரிடம் கூறிய அமைச்சரவை அமைச்சர்களில் லூயிஸும் ஒருவர்

பிராண்டன் லூயிஸ் கடந்த 2020ஆம் ஆண்டு வடக்கு அயர்லாந்து செயலாளராக ஆனார். அவர் ஸ்டோர்மாண்ட் மற்றும் வடக்கு அயர்லாந்து நெறிமுறையில் அதிகாரப் பகிர்வு நெருக்கடியைக் கையாண்டது குறித்து அரசியல் கட்சிகளின் விமர்சனங்களை எதிர்கொண்டார்.இராஜினாமாவிற்கு பிறகு தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நேர்மையான மற்றும் பொறுப்பான அரசாங்கம் நேர்மை, ஒருமைப்பாடு மற்றும் பரஸ்பர மரியாதையை நம்பியுள்ளது.

அந்த விழுமியங்கள் நிலைநிறுத்தப்படும் என்று நான் இனி நம்பவில்லை. அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பது ஆழ்ந்த தனிப்பட்ட வருத்தத்திற்குரிய விடயம்’ என பதிவிட்டுள்ளார்.