கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய உள்ள பொரிஸ் ஜோன்சன்!

கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இன்று (வியாழக்கிழமை) இராஜினாமா செய்ய உள்ளார்.இருப்பினும் அவர் இலையுதிர் காலம் வரை பிரித்தானியாவின் பிரதமராக பதவியில் இருப்பார் என்று நம்பப்படுகிறது.

ஜோன்சன் தனது இராஜினாமாவை உறுதிப்படுத்த இன்று பின்னர் டவுனிங் வீதிக்கு வெளியே ஒரு அறிக்கையை வெளியிட உள்ளார்.செவ்வாய் மாலையில் இருந்து 57 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா செய்துள்ளனர்.இது அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதற்கான கடுமையான முயற்சியின் முடிவை குறிக்கிறது.

இந்த கோடையில் கன்சர்வேடிவ் தலைமைப் போட்டி நடைபெறும், மேலும் ஒக்டோபரில் டோரி கட்சி மாநாட்டில் புதிய பிரதமர் பதவிக்கு வருவார்.ஆனால், இலையுதிர் காலம் வரை ஜோன்சன் பதவியில் தங்குவது சாத்தியமில்லை என்று இரு முன்னாள் அமைச்சர்கள் கூறியுள்ளனர்.இன்று இரவுக்குள் அவர் வெளியேற வேண்டும் எனவும் ரொப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.