மருதானையில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த தொடருந்தில் மூன்றாம் வகுப்பு பெட்டியொன்றின் ஆசனத்திற்கு அடியில் இருந்து 57 T-56 ரக துப்பாக்கி குண்டுகளை தொடருந்து பாதுகாப்பு படையினர் கண்டெடுத்துள்ளனர்.
இச்சம்பவமானது, இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது.
பெலியத்த தொடருந்து நிலையத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தொடருந்தில் சோதனையிட்ட போதே குறித்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன்போது, இரு நபர்கள் தொடருந்தை விட்டு வெளியேறியதாகவும், பின்னர் இருவரும் அமர்ந்திருந்த ஆசனங்களுக்கு அடியில் துப்பாக்கி குண்டுகள் அடங்கிய பை ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.