வந்தது ஒரு தொலைபேசி அழைப்பு -30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமான பயணிகள் கதறல்


ஈரானில் இருந்து சீனா சென்ற விமானத்திற்கு தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இருந்து சீனா சென்ற இந்த விமானம் நேற்று காலை 9.20 மணியளவில் இந்திய வான்பரப்பிற்குள் நுழைந்தவேளை அந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து விமானத்தை டெல்லியில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்க விமானி அனுமதி கேட்டிருக்கிறார். ஆனால், தொழில்நுட்ப சிக்கல் காரணமாக இந்திய விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இருப்பினும் ஜெய்ப்பூர், சண்டிகர் உள்ளிட்ட விமான நிலையங்களில் விமானத்தை தரையிறக்க விமானிக்கு அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், அந்த விமானி இதனை ஏற்கவில்லை.

இந்நிலையில், இந்திய இராணுவத்தின் விமானப்படைக்கு இதுகுறித்து தகவல் கிடைத்திருக்கிறது. உடனடியாக இந்திய விமானப்படையில் உள்ள சில விமானங்கள் அந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விமானத்தை பின்தொடர்ந்தன. மேலும், அந்த விமானத்தை தொடர்ந்து கண்காணித்து வந்த இந்திய போர் விமானங்கள், அவ்விமானம் இந்திய வான்பரப்பை கடக்கும் வரையில் பாதுகாப்பும் அளித்திருக்கின்றன.

அதன்பின்னர் அந்த விமானம் திட்டமிட்டபடி சீனாவில் உள்ள Guangzhou விமான நிலையத்தில் தரையிறங்கியிருக்கிறது. பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.