அக்குரணை முஸ்லிம் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் எச்சரிக்கை..! வாகனங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கும் அனுமதி


அக்குரணை முஸ்லிம் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படுவதற்கான திட்டமொன்று தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் அக்குரணை பள்ளிவாசலுக்கு அறிவித்துள்ளனர்.

இந்த தகவலை அடுத்து பாதுகாப்பை தாம் உறுதிப்படுத்துவதாகவும் காவல்துறையினர் அறிவித்துள்ளதாக அக்குரணை பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவிக்கின்றது.

இந்த விடயம் தொடர்பில் அக்குரணை மக்கள் பொறுப்புடன் இருக்க வேண்டும் என பள்ளிவாசல் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், தமது கட்டளையை மீறி பயணிக்கும் வாகனங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தமக்கு அறிவித்துள்ளனர் என அக்குரணை பள்ளிவாசல் தலைவர் சட்டத்தரணி அஸ்மீன் பாரூக் தெரிவித்துள்ளார்.

மேலும், தாக்குதல் ஒன்று நடத்தப்படும் என தகவல் கிடைத்துள்ளதாக தமக்கு காவல்துறையினர் தலைமையகம் அறிவித்ததாக அலவத்துகொட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பை அடுத்து, அக்குரணை பகுதி மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன