பிக்பாஸ் டைட்டிலை வென்ற அர்ச்சனா! யார் இவர்?


பிக்பாஸ் டைட்டிலை வென்ற அர்ச்சனா! யார் இவர்?

பிக்பாஸ் சீசன் 7ன் டைட்டில் வின்னர் ஆகி இருக்கிறார் விஜே அர்ச்சனா, வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்நுழைந்து பிக்பாஸ் வரலாற்றில் முதன்முறையாக வெற்றியாளராகி இருக்கிறார்.

சென்னையில் 1991ம் ஆண்டு பிறந்தவர் அர்ச்சனா(வயது 32), தந்தை ரவிச்சந்தர், தாய் ஜெயந்தி, சகோதரி அக்ஷயா.

தமிழ் பேராசிரியரான அர்ச்சனாவின் தந்தை, தனது மகள் தமிழில் முதன்மை பெற வேண்டும் என்பதற்காக பள்ளிப்பருவத்திலேயே அதற்கான பயிற்சிகளை கொடுத்துள்ளார்

பேச்சு போட்டிகள், கவிஞர்களின் புத்தகங்கள் என தமிழ் புலமையை அதிகரிப்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

தனது மகளுக்கு பாடுவதிலும் திறமை இருப்பதை உணர்ந்த அர்ச்சனாவின் தந்தை, கர்நாடக இசை பயின்று கொள்ள அனுப்பியுள்ளார்.

படிப்பிலும் படு சுட்டியாக இருந்துள்ளார் அர்ச்சனா, தொடர்ந்து பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றுள்ளார்.

கல்லூரியிலும் கலை நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொண்டுள்ள அர்ச்சனா மேலும் மேலும் திறமைகளை வளர்த்துக் கொண்டார்.

தொடர்ந்து தொலைக்காட்சி ஒன்றில் நடந்த ‘குயின் ஆஃப் டிஜிட்டல்’ மீடியா’ என்ற ஆடிசனில் கலந்து கொண்டு விஜே-வானார்.

நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறி அசத்தி வந்த அர்ச்சனாவுக்கு, ராஜா ராணி சீரியல் 2 ல் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

தொடர்ந்து வெப் சீரிஸ் மற்றும் அடுத்தடுத்து சின்னத்திரை வாய்ப்புகள் வர, பிக்பாஸ் சீசன் 7ல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக களமிறங்கி வெற்றி பெற்று சாதனையும் படைத்துள்ளார்.