பிக்பாஸ் சீசன் 6 - இவர்களா போட்டியாளர்கள்?

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6 அக்டோபர் மாதம் 9ம் திகதி முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 சீசன்கள் வெற்றிகரமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. தற்போது மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 6வது சீசன் தொடங்கியுள்ளது.விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பிக்பாஸ் சீசன் 6 இன் தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில், இந்த சீசனில் கலந்துகொள்ளவுள்ள போட்டியாளர்களின் அறிமுகம் நடைபெறும்.