அமெரிக்காவில் உள்ள புலம்பெயர்ந்தவர்களுக்கு பெரும் சிக்கல் - ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு


அமெரிக்காவில் சட்டவிரோதமாக உள்ள புலம்பெயர்ந்தோரை நீக்கும் விதமாக புதிய நடவடிக்கையொன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்துள்ளார்.

இதனடிப்படையில், மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான தகவல்களை சேகரிக்கும் முறையில் திருத்தம் செய்ய ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின், சட்டவிரோதமாக தங்கியுள்ள புலம்பெயர்ந்தோரை வெளியேற்றுவதில் ட்ரம்ப் தீவிரம் காட்டி வருகின்றார்.

இந்தநிலையில், அமெரிக்காவில் 1.20 கோடி பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து, அவர்களை வெளியேற்ற ட்ரம்ப் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பு முறையில் மாற்றம் செய்யுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் மற்றும் தகவல்களை பயன்படுத்தி, மக்கள்தொகை கணக்கெடுப்பு, நவீன கால உண்மைகள் மற்றும் புள்ளி விபரங்களின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்படும்.


இதன்படி அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் விலக்கப்படுவர்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவில் பத்து ஆண்டுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்கின்ற நிலையில், இறுதியாக 2022 இல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.