இஸ்ரேலுக்கு சில ஆயுத ஏற்றுமதி உரிமங்களை இடைநிறுத்திய பிரித்தானிய அரசாங்கத்தின் செயல் வெட்கக்கேடானது என அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொந்தளித்துள்ளார்.
இஸ்ரேலுடனான 350 ஆயுத ஏற்றுமதி உரிமங்களில் 30ஐ அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் லாம்மி திங்களன்று தெரிவித்தார்.
குறித்த ஆயுதங்களை சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களைச் செய்ய இஸ்ரேல் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

காஸாவில் ஹமாஸ் படைகளின் சுரங்கப்பாதையில் இருந்து 6 பணயக்கைதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டதற்கு அடுத்த நாள் பிரித்தானியாவின் இந்த முடிவு வெளியிடப்பட்டது.
இதற்கு பல இஸ்ரேல் அமைச்சர்கள் உடனடியாக எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையிலேயே பிரித்தானியாவின் முடிவை இஸ்ரேல் பிரதமர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரித்தானிய அரசாங்கத்தின் இந்த வெட்கக்கேடான முடிவு ஹமாஸ் படைகளை தோற்கடிக்கும் இஸ்ரேலின் உறுதியை மாற்றாது என நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.