15 வயதில் ஆணாக மாறிய பிரபல நடிகரின் மகள்!

பிரபல ஹாலிவுட் நடிகரான பென் அஃப்லெக்கின் 15 வயது மகள் தான் ஆணாக மாறிவிட்டதாகவும் தனது புதிய பெயரையும் அறிவித்துள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

தனது பெயரையும் மாற்றிக் கொண்டிருப்பதாக அவரது  தாத்தாவின் இறுதிச் சடங்கின் போது அறிவித்துள்ளார்.

ஹாலிவுட் நடிகர் பென் அஃப்லெக்கும், நடிகை ஜெனிஃபர் கார்னரும் கடந்த 2005ஆம் ஆண்டு  காதல் திருமணம் செய்துக்கொண்டனர்.

திருமணமாகி 15 ஆண்டுகளின் பின்னர் இந்த நட்சத்திர ஜோடி விவாகரத்து பெற்றனர். அவர்களுக்கு வயலட் ஆன் அஃப்லெக், செராஃபின் ரோஸ் எலிசபெத் அஃப்லெக் என்கிற மகள்களும், சாமுவல் கார்னர் அஃப்லெக் என்ற மகனொருவரும் இருக்கின்றார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி  ஜெனிஃபர் கார்னரின் தந்தை வில்லியம் ஜாக் கார்னர்  85வது வயதில்  உயிரிழந்தார்.

இவரின்  இறுதிச் சடங்கின் போது  செராஃபின் கலந்து கொண்டு உரையாற்றிய போதே குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.