விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெக்கோ சமனின் மனைவி : ஹெரோயினுடன் சிக்கிய பிக்கு



பெக்கோ சமனின் மனைவியை செப்டம்பர் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
அந்த வழக்கு தொடர்பான சாட்சியங்களை வழங்க அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் பணிப்பாளருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.

இதேநேரம் மாத்தளை, அலவ்வ பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்ததாக கூறி, பௌத்த துறவி ஒருவர் உட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
மாத்தளை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
கைது செய்யப்பட்ட 38 வயதான பௌத்த துறவி, அலவ்வ பகுதியின் விகாரை ஒன்றைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கைது செய்யப்பட்டபோது, அவரிடம் இருந்து 10 கிராம் ஹெரோயின் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
 
ஏனைய இருவரிடம் இருந்தும் 17 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 
அவர்கள் மூவரும் மினுவாங்கொடையைச் சேர்ந்த நேவி தினேஸ் என்பவரின் போதைப்பொருள் கடத்தல் குழுவுடன் தொடர்புடையவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் நமது நாடு ஆயுதமேந்திய கு ற்  ற க் கு ம்  ப ல்  க  ளு க் குபலியாகியுள்ளது. அவர்கள்இந்த நாட்டில் ஒரு பாதாளஉலக அரசை உருவாக்கியுள்ளனர். அவர்களுக்கு அரசியல்அதிகாரத்தினதும், பொலிஸாரினதும் பாதுகாப்புக் கிடைத்தது. இருப்பினும், இந்தபாதாள அரசை நாம் நிச்சயமாக முடிவுக்குக் கொண்டுவருவோம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.