ஆடு அறுக்கிறதுக்கு முன்னர்.. ஆட்டிட ஏதோ ஒரு உறுப்பை அறுப்பதுபோல..’


ஆடு அறுக்கிறதுக்கு முன்னர்.. ஆட்டிட ஏதோ ஒரு உறுப்பை அறுப்பதுபோல..’ என்று கிராமங்களில் ஒரு சொல்லாடல் இருக்கின்றது.

‘இனப்பிரச்சனைக்கான தீர்வு..’ என்று யாராவது ஆரம்பித்து அந்த வசனத்தை முடிக்கும் முன்பதாகவே, ‘முஸ்லிம்களுக்கு அநீதி இளைக்கப்பட்டுவிட்டது’, ‘தீர்வில் முஸ்லிம்கள் ஓரங்கட்டப்பட்டுவிட்டார்கள்..’ என்று ஒரு பக்கம் ஒப்பாரியை ஆரம்பித்துவிடுவார்கள் சிலர்.

நாடாளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாணத்தின் முன்நாள் முதலமைச்சருமான நசீர் அகமட் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆரம்பித்துள்ள ஒப்பாரியும் அப்படித்தான் இருக்கிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வந்து தமிழ் கட்சிகளுடன் பேசிவிட்டுச் சென்ற அடுத்த நிமிடமே, ‘அவர் இதற்காகத்தான் இலங்கைக்கு வந்தார்’, ‘அதற்காகத்தான் இலங்கைக்கு வந்தார..’; எண்டு ‘என்னென்னவோ கம்பி கட்டுற கதையெல்லாம்’ கதைக்க ஆரம்பித்துவிட்டார்.

ஏதோ தமிழ் மக்களுக்கு தனி நாடு கிடைத்துவிட்டதுபோலவும், முஸ்லிம்கள் எல்லாம் அந்த தனிநாட்டில் ஒடுக்கப்படுவது போலவும் ஒப்பாரிவைத்து அறிக்கைகளாக விட்டுத்தள்ளிவருகின்றார்.

'வடக்கும் கிழக்கும் தமிழர்களின் மாகாணம். “இணைக்கப்பட்ட வடஇகிழக்கில் காணிஇ பொலிஸ் அதிகாரங்களை வழங்கல்இ சமஷ்டிக்கு நிகரான தீர்வுக்கு வித்திடல்” போன்ற நிலைப்பாட்டிலே இந்தியாவுள்ளது. இந்தியாவின் இந்த நிலைப்பாடுகள்இ முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தும் அச்சம் குறித்து இந்திய அரசாங்கத்தை தெளிவுபடுத்துவது முஸ்லிம் தலைமைகளின் பொறுப்பு. தமிழரின் தாயகம் என்ற வார்த்தைப் பிரயோகம் தமிழ் பேசும் முஸ்லிம்களையும் உள்ளடக்கியதா? அவ்வாறானால் இம்மாகாணங்களிலுள்ள முஸ்லிம்களின் காணிகளுக்கு உத்தரவாதம் என்ன? கடந்த காலங்களில் பறிபோன முஸ்லிம்களின் காணிகளை மீளப் பெறுவது எப்படி? இவற்றை மீள ஒப்படைப்பது யார்? மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிளின் பலவந்தத்தால் பறிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை மீள ஒப்படைப்பது யார்?'

இவ்வாறு, வராத தீர்வு பற்றி தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி ஊடக அறிக்கைவிட்ட அகமட், கடைசில் ஒரு எச்சரிக்கையையும் விட்டிருந்தார்.

'இந்தியாவோ அல்லது வேறெந்த தரப்பினரதோ முயற்சிகளால் கொண்டுவரப்படும் தீர்வுகள் முஸ்லிம்களை திருப்திப்படுத்தாது அமைந்தால், அது நிரந்தரத் தீர்வாக அமையாதென்பதை உறுதியுடன் கூறுவதாகவும்' அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்ததிருநற்தார்.

நசீர் அகமட்டின் எச்சரிக்கையையும், கிழக்கில் உருவாகிவருவதாக கூறப்பட்டுவருகின்ற முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் பற்றிய செய்திகளையும் வேறு வேறு சம்பவங்களாகப் பார்க்கமுடியவில்லை.

மற்றொரு ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் நடந்துவிடக்கூடது என்று எல்லோருக்கும் பொதுவான இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்.