பீஸ்ட் பட வெற்றி-விருந்து வைத்த விஜய்!

பீஸ்ட் படம் பெரிய அளவில் வெற்றியடைந்ததற்காகப் படக்குழுவினருக்குத் தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார் விஜய்.விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஏப்ரல் 13 அன்று வெளியானது பீஸ்ட் படம். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு இசை – அனிருத்.படம் வெளியாகி 10 நாள்களுக்கு மேல் ஆன நிலையில் நெல்சன், பூஜா ஹெக்டே, அனிருத் உள்ளிட்ட படக்குழுவினருக்குத் தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார் விஜய். இதுபற்றி ட்விட்டரில் இயக்குநர் நெல்சன் கூறியதாவது:எங்களுக்கு விருந்து அளித்ததற்கு நன்றி விஜய் சார். மிகவும் ஜாலியான, மறக்க முடியாத மாலை வேளை எங்கள் அனைவருக்கும் அமைந்தது. விஜய் சார் அளித்த அன்புக்கும் ஆதரவுக்கும் இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடன் பணிபுரிவது அழகான அனுபவம். இந்த அனுபவத்தை என் வாழ்வில் எப்போதும் நினைவில் கொள்வேன். உங்களுடைய வசீகரமும் புகழும் இந்தப் படத்தைச் சாத்தியமாக்கியுள்ளது.இந்த வாய்ப்பை அளித்த சன் பிக்சர்ஸ், கலாநிதி மாறன், காவ்யா மாறனுக்கு நன்றி. படக்குழுவினரின் உதவியின்றி இப்படத்தை உருவாக்கியிருக்க முடியாது. அவர்கள் சிறப்பாகப் பணியாற்றினார்கள். எங்களுக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. விஜய் சார் மற்றும் படக்குழுவினருடன் துணை நின்று பீஸ்டைப் பெரிய வெற்றிப்படமாக உருவாக்கியுள்ளீர்கள் என்றார்.