அதள பாதாளத்தில் பீஸ்ட்!

விஜய்யின் பீஸ்ட் கடந்த 13ம் தேதி திரைக்கு வந்தது. படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதால் நெகட்டிவ் விமர்சனங்கள் தான் அதிகம் வந்தது.ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் ஆன கேஜிஎப் 2 படம் தான் தற்போது பாக்ஸ் ஆபிசில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஹிந்தியில் மட்டுமே இந்த படம் விரைவில் 300 கோடி வசூலை தொட இருக்கிறது. தமிழ்நாட்டிலும் பீஸ்ட் படத்தை கேஜிஎப் ஓரங்கட்டிவிட்டது.தற்போது கேஜிஎப் 2க்கு தான் 450க்கும் அதிகமான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இரண்டாவது வாரத்திலும் ஸ்பெஷல் காட்சிகள் அதிகாலையில் சில தியேட்டர்களில் போட்டு வருகின்றனர். அந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.அமெரிக்காவில் அதள பாதாளத்தில் பீஸ்ட்,தற்போது 10 நாட்களை கடந்திருக்கும் நிலையில் பீஸ்ட் வசூல் அதல பாதாளத்தில் இருக்கிறது. நேற்று கேஜிஎப் 2 படம் $231,455 அமெரிக்காவில் வசூலிக்க, பீஸ்ட் வெறும் $9,425 மட்டுமே பெற்றிருக்கிறது.