பசிலின் அமெரிக்க சொத்து பட்டியல் விரைவில் பகிரங்கம்!

 


பசில் ராஜபக்ஷவின் அமெரிக்க சொத்து பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்ஷ அமெரிக்காவுடன் விரைவில் கோபம் கொள்ளப் போவதாகவும் விமல் குறிப்பிட்டார்.

ஹெலிகொப்டர் மெதமுலன குழியில் தங்க வேண்டிய அவசியமில்லை எனவும் தாம் உட்பட சுதந்திர மக்கள் கூட்டமைப்பினர் மெதமுலன குழிக்குள் பின்னாலிருந்து செல்லமாட்டார்கள் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.

ஹெலிகொப்டரை அல்ல ஜெட் விமானத்தை கொண்டு வந்தாலும் நடுத்தர வர்க்க அரசியலுக்கு புத்துயிர் கொடுக்க முடியாது எனவும் அவர் கூறினார். அண்மையில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவற்றினை குறிப்பிட்டுள்ளார்கரன் தொடர்பான தகவல்களை மத்திய, மாநில உளவுப் பிரிவினர் மீண்டும் திரட்டி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றது. இதுகுறித்து நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்த நிலையில் அவரது இந்த கருத்துக்கு இலங்கை ராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது.

இவ்வாறான நிலையில், நெடுமாறனின் இந்த கருத்தை முழுமையாக புறந்தள்ளிவிட முடியாது என்பதால் பிரபாகரன் பற்றிய தகவல்களை மீண்டும் திரட்ட மத்திய உளவு பிரிவினர் உத்தரவிட்டுள்ளனர்.

பிரபாகரன் தொடர்பான தகவல்களை தமிழக க்யூ பிரிவு பொலிஸாரும் திரட்டத் தொடங்கியுள்ளனர். பிரபாகரன் மரணமடைந்ததாக ஏற்கெனவே திரட்டப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் மீண்டும் கையிலெடுக்கப்பட்டு புலனாய்வு நடத்தப்பட்டு வருகிறது.

பிரபாகரன் குறித்து வெளியிட்ட தகவல் தொடர்பாக நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தவும் உளவுப் பிரிவினர் முடிவு செய்துள்ளனர்.

நெடுமாறன் மற்றும் அவரது தொடர்புடையவர்களின் நடமாட்டம் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுப்படுகின்றது.