ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் (sasikala raviraj) வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் இன்று (26.10.2024) காலை இடம்பெற்றுள்ளது.
அயல் வீட்டில் உள்ள இலங்கை தமிழரசு கட்சியின் (Ilankai Tamil Arasu Kachchi) ஆதரவாளரான பெண் ஒருவராலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சசிகலா ரவிராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குறித்த பெண் தனது (சசிகலாவின்) வீட்டின் உள்ளே சென்று வீட்டில் உள்ள அலுமாரியின் கண்ணாடிகளை அடித்து உடைத்ததாக சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண்ணினால் தான் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் வேட்பாளர் சசிகலா ராவிராஜ் சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.