உங்களை பார்த்தால் வெறுப்பாக இருக்கிறது - இந்தியாவுக்கே போங்கள்! அமெரிக்காவில் இந்தியப் பெண்கள் மீது இனவெறி தாக்குதல் - Video

அமெரிக்காவில் இந்தியப் பெண்கள் நால்வரை மெக்சிகோ அமெரிக்கன் பெண் ஒருவர் இன ரீதியாக வசைபாடியதுடன் அவர்களைத் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு விடுதி ஒன்றில் 4 இந்திய பெண்கள் கார் நிறுத்தும் பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு பெண் அவர்களை பார்த்து ஆவேசமாக கூச்சலிட்டுள்ளார்.

அந்தப் பெண், இந்தியர்களாகிய உங்களைப் பார்த்தால் எனக்கு வெறுப்பாக இருக்கிறது. வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக் கொள்ள இந்தியர்கள் எல்லோரும் அமெரிக்காவுக்கு வந்துவிடுகின்றனர். நான் எங்கு சென்றாலும் இந்தியர்கள் இருக்கின்றனர். உங்கள் இந்தியாவில் வாழ்வது சிறப்பானது என்றால் ஏன் நீங்கள் எல்லோரும் இங்கே வருகிறீர்கள். நீங்கள் எல்லோரும் இந்தியாவுக்கே திரும்பிப் போங்கள் எனக் கூச்சலிடுகிறார். 

திடீரென அவர் இந்திய பெண்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டார். அதில் ஒரு பெண்ணுக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த பெண் அவர்களை பேசியதையும் இந்திய பெண்கள் தாக்கப்பட்டதையும் ஒருவர் காணொளியில் பதிவு செய்துள்ளார். 5 நமிட அந்த வீகாணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து தாக்குதல் நடத்திய பெண் கைது செய்யப்பட்டார். அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் அவர் மெக்சிகோவை சேர்ந்த பெண் என்று தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.