கஜேந்திரன் மீதான தாக்குதல் : சுமந்திரன் கடும் கண்டனம் : உடன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

  

திருகோணமலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனை ஞாயிற்றுக்கிழமை (17) உடல் ரீதியாகத் தாக்கிய குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பொறுப்பானவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

டுவிட்டர்‘எக்ஸ்’ தளத்தில் இது தொடர்பாக பதிவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,

காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். தாக்குதலின் காணொளி காட்சிகளில் சந்தேக நபர்களை அடையாளம் காண முடியும் என்று தெரிவித்துள்ள அவர், இது தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை மா அதிபரை (IGP) கேட்டுக்கொண்டார்.

 இந்த தாக்குதல் தொடர்பாக அதிபர் ரணில் விக்ரமசிங்க, பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரையும் குறிப்பிட்டு "இப்போது உங்கள் “நல்லிணக்க வாய்வீச்சை செயற்படுத்துங்கள்” என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.