”இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா களமிறங்கும்” ஈரானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால், நேரடியாக களத்தில் இறங்க அமெரிக்க இராணுவம் தயாராக இருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் காசா போர் துவங்கியதிலிருந்தே, லெபனானிலிருக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா என்னும் போராளிக்குழு இஸ்ரேலுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றது

இந்த நிலையில், இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தியதில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறி ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலை தாக்கியதில் இஸ்ரேல் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, தமது மக்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பழிவாங்குவோம் என்றும் ஹிஸ்புல்லா மிரட்டியுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால், அமெரிக்க ராணுவம் நேரடியாக களத்தில் இறங்கும் என ஈரானையும் ஹிஸ்புல்லா அமைப்பையும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஏற்கனவே, அமெரிக்கா விமானம் தாங்கிக் கப்பல்களை மத்தியதரைக்கடல் பகுதிக்கு அனுப்பியுள்ளது.

இதற்கிடையில், ரஷ்ய கூலிப்படையான வாக்னர் குழு, ஹிஸ்புல்லா அமைப்புக்கு உதவ முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், பாரிய யுத்தம் ஏற்பட்ட வாய்ப்புள்ளதாக பூகோள அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், பலஸ்தீனத்திற்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பாரிய விளைவை சந்திக்க நெருடும் என ஈரான் அமெரிக்காவை எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது