இலங்கையில் பதிவான கொடூரம் : கத்தியை காட்டி பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம்


அநுராதாபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் நேற்றிரவு பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
இதுதொடர்பில் சபையில் தெரிவித்த அவர்,

அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த வெளியாள் ஒருவர் கத்தியை காண்பித்து மிரட்டி பெண் வைத்தியர் ஒருவரை துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதனால் ஏனைய வைத்தியசாலைகளில் மருத்துவர்கள் அச்சத்துடன் இருக்கின்றனர்ஃ

இந்த விடயம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென அவர் மேலும் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால,

அனுராதபுரம்  போதனா வைத்தியசாலையில் சேவையாற்றிய  பெண் வைத்தியர்  பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக  இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற நபர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

குற்றவாளியை கைது செய்வதற்கு ஐந்து விசேட பொலிஸ் பிரிவுகள் ஊடாக  பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்றார்.