அரசுக்கு எதிராக போராடிய 60 பேர் சுட்டுக்கொலை.! ஆப்பிரிக்கா நாடான சாத்தில் சம்பவம்

ஆப்பிரிக்கா நாடான சாத்தில் ஆளும் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்நாட்டு தலைநகர் என்டிஜாமேனாவில் போராட்டக்காரர்கள் தடையை மீறி பேரணியாக செல்ல முயன்றனர்.

இதையடுத்து அவர்கள் மீது அந் நாட்டு காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளனர். இத துப்பாக்கிச் சூட்டில் 30 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், பலர் காயமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதேவேளை, அந்த நாட்டின் 2-வது பெரிய நகரமான மவுண்டோவில் போராட்டம் நடத்தியவர்கள் மீதும் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடாத்தியுள்ளனர்.

அதிலும், 30 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.