இலங்கையின் ஒன்பதாவது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க இன்றையதினம்(23) காலை பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நிலையில், யாழ்ப்பாணத்தில் அனுரவின் ஆதரவாளர்கள் இவ் வெற்றியை கொண்டாடினார்கள்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் காரியாலயத்தில் இன்று(23) காலை பொங்கல் பொங்கி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றியை ஆதரவாளர்கள் கொண்டாடினார்கள்.
இதன்போது, பொதுமக்களுக்கு பொங்கல் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.